நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-10-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டமான நிலை
இதனடிப்படையில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்