இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 14 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்