மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Climate Change Weather Rain
By Thulsi Jun 13, 2025 10:08 AM GMT
Report

புதிய இணைப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து சிவப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (13) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த சிவப்பு எச்சரிக்கை, நாளை (14) பிற்பகல் 2.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனவே கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13.06.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறக்கம்

கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறக்கம்

பலத்த காற்று வீசக்கூடும் 

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் மின்னல்

இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு, புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும் எனவும், சிலாபம் முதல் புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. அளவில் இருக்கும், ஆனால் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. அளவில் இருக்கும்.

பொதுமக்கள் வானிலை மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாழ்.மாநகரசபை முதல்வர் தெரிவில் மும்முனைப்போட்டி

யாழ்.மாநகரசபை முதல்வர் தெரிவில் மும்முனைப்போட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026