நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பனிமூட்டமான நிலை
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தின் காரணமாக இன்று பகல் வேளையில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 13 மணி நேரம் முன்