வடக்கு உட்பட பல பிரதேசங்களில் இன்று பலத்த மழைவீழ்ச்சி -வெளியானது அறிவிப்பு
rain
Department of Meteorology
north and east
By Sumithiran
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் இன்றையதினம் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாவட்டங்களிலும், அநுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மழைவீழ்ச்சி நேரத்தில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.