ஐரோப்பாவில் தொடரும் துருவகுளிர் தாக்குதல்! இன்று 3 வது நாளாகவும் பனிப்பொழிவு
ஐரோப்பாவில் இன்றும் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல இடங்களில் மூன்றாவது நாளாகவும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்கின்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான அம்ஸ்டர்டாம் விமான நிலையமான ஷிபோலின் கடந்த இரண்டு நாட்களில் ஏற்கனவே ஏராளமான விமான சேவைகள் மீளெடுக்கப்பட்ட நிலையில் இன்று குறைந்தது 700 விமானசேவைகள் மீளெடுக்கபட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
நேற்றைய நெருக்கடி காரணமாக ஷிபோல் விமான நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமது இரவைக் கழித்த நிலையில் நெதர்லாந்திலும் தொடருந்து போக்குவரத்து இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Daily Express
பெல்ஜியத்தில், சீரற்ற வானிலை காரணமாக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இன்று நாற்பது விமான சேவைககள் மீளெடுக்கப்பட்டுள்ளன.
புதிய பனிப்பொழிவு
பிரான்சில், தலைநகர் பரிஸ் உட்பட்ட இடங்களில் இன்றும் பனிப்பொழிவு இருந்ததால் பல வீதிகளில் 1,650 கிலோமீற்ற துரத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல்கள் பதிவாகின.

இல்-து-பிரான்ஸ் பகுதியில், இன்று காலை 10:00 மணிக்கு, 7 சென்ரி மீற்றர் வரை புதிய பனிப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில் இன்று பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தது.
பிரித்தானியாவின் வட பகுதியில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர்காரணமான நெருக்கடிகள் தொடர்ந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 10 மணி நேரம் முன்