எரிமலை அருகே பறப்பில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி காணாமல் போனது
ஜப்பானில் உள்ள மவுண்ட் அசோ எரிமலை அருகே மூன்று பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா உலங்கு வானூர்தி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) அசோ நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து 10 நிமிட சுற்றுப்பயணத்திற்காக உலங்கு வானூர்தி புறப்பட்டது.ஆனால் திரும்பவில்லை என்று காவல்துறையினரை மேற்கோள் காட்டி உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்தி
விமானத்தை இயக்கிய 64 வயதான விமானி 40 வருட அனுபவம் வாய்ந்தவர் என்றும் அவரது பயணிகள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், இருவரும் தைவானியர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டரொபின்சன் R44 என்ற உலங்கு வானூர்தி, அது காணாமல் போன நாளுக்கு மூன்றாவது சுற்றுலா பயணத்தில் இருந்தது.
உலங்கு வானூர்தியின் நிறுவனம் டகுமி எண்டர்பிரைஸின் கூற்றுப்படி, அதன் முந்தைய இரண்டு பயணங்களில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை
எரிமலை நிலப்பரப்புகளில் உலங்கு வானூர்தி சுற்றுப்பயணங்கள்
தென்மேற்கு ஜப்பானில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் மவுண்ட் அசோவின் எரிமலை நிலப்பரப்புகளில் உலங்கு வானூர்தி சுற்றுப்பயணங்கள் அடங்கும்.

2024 ஆம் ஆண்டில், மவுண்ட் அசோ மீது பறந்து கொண்டிருந்த டகுமி எண்டர்பிரைஸ் சுற்றுலா உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறங்கியது, அதில் இருந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
மவுண்ட் அசோ கடைசியாக 2021 ஒக்டோபரில் வெடித்து, வானத்தில் ஒரு பெரிய புகை மூட்டத்தை அனுப்பியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |