கொழும்பில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதா? விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்

srilanka covid19 corona colombo hemantha herath
By S P Thas Jun 21, 2021 10:50 AM GMT
Report

கொழும்பு - 2, மாதிவெல பிரதேசத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மாதிரியொன்று அசாதாரணமான தன்மையுடையதாகக் காணப்படுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

கொழும்பு - 2 , கொம்பனி வீதியை அண்மித்த , மாதிவெல - ப்ரகதிபுற பிரதேசத்தில் நபரொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரி அசாதாரண தன்மையுடன் சதேகத்திற்கிடமானதாகக் காணப்படுவது இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்படும் மாதிரிகள் தொடர்பில் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த நபரது மாதிரியில் மாத்திரமே இவ்வாறு அசாதாரணமான நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தெமட்டகொட பிரதேசத்திலும் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்பட்டமையினாலேயே அந்த பகுதி கடும் கட்டுப்பாடுகளுடன் முடக்கப்பட்டது. அப்பிரதேசம் முடக்கப்பட்டு சுமார் ஒரு வாரத்தின் பின்னரே டெல்டா வைரஸ் இனங்காணப்பட்டது.

அதே போன்ற நிலைமையே தற்போதும் ஏற்பட்டுள்ளது. அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம்.

எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாகக் இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது.

தெமட்டகொட டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் அதற்கான வாய்ப்புக்கள் பல காணப்பட்டன.

தற்போது சுமார் 80 நாடுகளில் இந்த டெல்டா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இவற்றில் எந்தவொரு நாட்டிலிருந்தும் மக்கள் நாட்டுக்கு வருகை தர முடியும். இவ்வாறு வரும் நபர்கள் ஊடாக நிலைமாறிய வைரஸ் இலங்கைக்குள் வரக்கூடும். இது தவிர இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் நாட்டுக்கு வருபவர்கள் ஊடாகவும் டெல்டா வைரஸ் தொற்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்த வைரஸ் இனங்காணப்பட்டது. இவ்வாறானதொரு வைரஸ் இனங்காணப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரே இந்தியா பாரிதொரு தொற்று பரவலை எதிர்கொண்டது. இந்தியாவில் இந்த வைரஸ் இனங்காணப்பட்ட காலப்பகுதியில் அந்நாட்டிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்துசென்றனர்.

எனவே எம்மால் ஸ்திரமாகக் கூற முடியாவிட்டாலும் , இவ்வாறு ஏதேனுமொரு வழியில் டெல்டா வைரஸ் நாட்டுக்குள் பிரவேசித்திருக்கக் கூடும் என்று அனுமாணிக்கலாம். டெல்டா வைரஸ் தொற்றாளர் இதுவரையில் வேறு எந்த பிரதேசங்களிலும் இனங்காணப்படவில்லை. ஆனால் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏனைய பகுதிகளில் டெல்டா பரவியுள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020