காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !
Hair Growth
Beauty
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீகைக்காய் - 100g
- வெந்தயம் - 20g
- ரேத்தா - 100g
- உலர்ந்த நெல்லிக்காய் - 100g
- கறிவேப்பிலை - 2 கொத்து
- வேப்பிலை - 2 கொத்து
- ரோஸ்மேரி - 20g
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் சீகைக்காய், நெல்லிக்காய், ரேத்தா, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- மறுநாள், அதை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் அதை தீயில் வைத்து, அதனுடன் ரோஸ்மேரியைச் சேர்த்துத்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
- அடுத்து இது ஆறியதும் அதா வடிகட்டி எடுத்து அதை ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
- இந்த மூலிகை ஷாம்பூவை தொடர்ந்து பயன்படுத்து வருவதால் முடி அடர்த்தியாக வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி