மூன்று நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர்(படங்கள்)
சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகரும் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றிரவு(14) சந்தித்து கலந்துரையாடினர்.
வடமாகாண அபிவிருத்தி
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.
வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |