முல்லைத்தீவில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் (படங்கள்)
mullaitivu
discusion
Ali safri
By Sumithiran
நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Safri)தலைமையிலான நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையின் ஒருகட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது நீதி துறையினால் தீர்க்கப்படவேண்டிய மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் நீதி அமைச்சர் அலி சப்ரி,இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் நீதி அமைச்சின் செயலாளர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.




