ரணிலை விட சாகலவுக்கு அதிக பாதுகாப்பு : ஹிருணிக்கா சுட்டிக்காட்டு!
சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு தற்போது அதிக பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விட அதிகமான பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுவதாக கட்சியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரிவின் சோதனை நடவடிக்கை
சிறிலங்காவின் அதிபர் ஒரு குறித்த இடத்துக்கு செல்வதற்கு முன்னர், அவரது பாதுகாப்பு படையினர் அந்த இடத்தில் பாரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கைகள் தற்போது சாகல ரத்நாயக்க ஒரு இடத்துக்கு செல்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சாகல ரத்நாயக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல என்பதையும் அமைச்சர் அல்ல என்பதையும் தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரின் மனைவி
சிறிலங்கா அதிபரின் மனைவி, எந்தவொரு பாதுகாப்பும் இல்லாது தற்போது அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாக ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அதிபரின் பிரதானி பதவியில் உள்ள ஒருவருக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒரு நாடாக அனைவரும் வெட்கமடைய வேண்டுமெனவும், இதனை எதிர்க்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்