மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.
இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவை மற்றும் பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
போதைப்பொருளுக்கு அடிமை
மேலதிகமாக, கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 சிறுவர்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 39 பேர் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
