கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் விற்பனைக்கு - ஆங்கில ஊடகம் வெளியிட்ட தகவல்
colombo
sale
hilton--york--grand-oriental
By Sumithiran
திறைசேரிக்கு சொந்தமான செலந்திவா நிறுவனம், அரசுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள பிரபலமான கட்டடங்களை விற்பனை செய்யும் வகையில் வாங்குபவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று வார இறுதி ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பில் உள்ள யோர்க் கட்டடம், கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல், ஹில்டன் ஸ்போர்ட்ஸ் சென்டர், பிரதான ஹில்டன் ஹோட்டல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியமான இடங்கள் விற்பனை செய்யப்படும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இதன் மூலம், சொத்துக்களை மேம்படுத்த முதலீட்டாளர்களைக் கண்டறிய முடியும் என செலந்திவா நிறுவனம் நம்புவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
