பாகிஸ்தானில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை
பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் நில தகராறில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்கி மாவட்டத்தில் சத்தன் லால் என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமாக உள்ள 2 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து விட்டு இந்தியாவுக்கு ஓடும் படி முஸ்லிம்கள், சத்தன் லாலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், சத்தன் லால் நிலத்தில் பருத்தி ஆலை மற்றும் மாவு ஆலை அமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதற்கு வந்த சிலர், சத்தன் லாலை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர்.
கோட்கி மாவட்டத்தில் இந்துக்கள் கொலையாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் என காவல்துறையினர் கூறியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
அதேபோல் கடந்த 30ம் திகதி பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவரி நகரில் கிறிஸ்தவ பாதிரியார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.