மனித துன்பங்களுக்கு ஹிட்லரே காரணம் -இராஜாங்க அமைச்சருக்கு ஜேர்மன் தூதுவர் பதிலடி
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களித்த அனைத்து மக்களும், ஹிட்லரை போன்றதொரு ஆட்சியை எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் இன்று பதிலளித்தார்.
“ஒரு ஹிட்லர்” இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டதை நான் கேள்விப்பட்டேன். மில்லியன் கணக்கான இறப்புகளுடன், கற்பனைக்கு எட்டாத மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் ஹிட்லர் தான் காரணம் என்று அந்தக் குரல்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் அவர் முன்மாதிரி இல்லை! ” என ஜேர்மன் தூதுவர் டுவீட் செய்துள்ளார்.
I‘m hearing claims that “a Hitler“ could be beneficial to Sri Lanka today. Let me remind those voices that Adolf Hitler was responsible for human suffering and despair beyond imagination, with millions of deaths. Definitely no role model for any politician!
— Ambassador Holger Seubert (@GermanAmbColo) April 13, 2021