கிளிநொச்சி பாடாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - அரசாங்க அதிபர் தகவல்
நாட்டில் ஏற்பட்டுவரும் கனமழையின் தாக்கம் காராணமாக நாளையதினம் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் (Rubawathi Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநர் அறிவறுத்தியிருந்த நிலையில் கிளிநொச்சி பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் கிளி.அரசாங்க அதிபரிடம் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தொலைபேசி ஊடாக வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல் முன்னெடுக்கப்படுவதாகவும், நாளைய தினம் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீரற்ற காலநிலை தொடர்ந்தால் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பளை மற்றும் பூநகரி பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.