தீயாய் பரவிய பகீர் காணொளி! வெளிநாடொன்றில் இலங்கை பெண் உட்பட இருவர் அதிரடி கைது
ஹொங்காங்கில் வீசிய ரகாசா புயல் காரணமாக நகரம் முழுவதும் சூறாவளி எச்சரிக்கை நடைமுறையில் இருந்தபோதும், அதனை புறக்கணித்து சிறுவனை கடற்கரை அருகே அழைத்துச் சென்ற இந்தியத் தாயும், அவருடைய இலங்கை தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப் லெய் சவ் (Ap Lei Chau) பகுதியில் இடம்பெற்றது. சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், கடல் கொந்தளப்பில் இருக்கும் போது, பெண் ஒருவர் சிறுவன் ஒருவனை கையில் பிடித்தவாறு நிலையில் மற்றொருவர் காணொளி பதிவு செய்வதை காட்டுகிறது.
மூவரையும் அடித்து வீசிய அலை
இந்த சந்தர்ப்பத்தில் பல மீட்டர் உயரமுள்ள அலை ஒன்று கடற்கரை தடுப்பு சுவரைத் தாண்டி மூவரையும் அடித்து வீசியது. அவர்கள் தரையில் உருண்டு விழுந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இதன்படி, காவல்துறை, சிறுவனை ஆபத்தில் ஆழ்த்திய பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டதற்காக இரு பெண்களையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியப் பிரஜையான சிறுவனின் தாய் மற்றும் அவரது இலங்கை தோழி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டரீதியான நடவடிக்கை
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.பொதுமக்கள் “அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபோதும், இவ்வாறு ஆபத்தான சூழலில் சிறுவனை அழைத்துச் செல்வது மிகவும் பொறுப்பற்ற செயல்” என கண்டித்துள்ளனர்.
மேலும், இத்தகைய செயற்பாடுகள் மீட்பு பணியாளர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
