கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்
Bandaranaike International Airport
Nimal Siripala De Silva
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாதுகாப்பு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து விமான நிலைய வளாகத்தில் இன்று மாலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு சேவையில் நூற்று ஐம்பது ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த சில நாட்களாக பல சுற்று நேர்காணல்கள் நடத்தப்பட்டன.
அமைச்சரின் தலையீட்டால் பதற்றம்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 50 பெண் அதிகாரிகளையும் 25 ஆண் அதிகாரிகளையும் தெரிவு செய்ததாக அங்கிருந்த சிலர் குற்றம் சுமத்தியதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி