பல்கலைக்கழக மாணவரை தாக்கிய காவல்நிலைய பொறுப்பதிகாரி! வழங்கப்பட்ட தண்டனை
ஸ்ரீ ஜயவர்தனபுர (Sri Jayawardenepura) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 4 பேரை கடுமையாக தாக்கி, கைது செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம (Tissamaharama) காவல்துறையின் முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக மாத்தறை (Matara), மாகாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன் (Samara Tennakon) தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
காவல்நிலைய பொறுப்பதிகாரி
இதன் போது, திஸ்ஸமஹாராம காவல்துறையின் முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் ஒன்றில் மட்டுமே அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2008 இல் தாக்கல் செய்யப்பட்டது.
அவருடன் குற்றம் சாட்டப்பட்ட கொஸ்கொட காவல்நிலைய பொறுப்பதிகாரி புபாத் தேஷபந்து (Pubath Deshabandu) மற்றும் சார்ஜன்ட் குலதுங்க (Kulatunga) ஆகியோர் 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.
இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணையின் போது, அரசாங்கத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரஞ்சன் பீரிஸும் (Neranjan Peiris) , சந்தேக நபர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராசிக் சரூக்கும் (Saruk) முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
