ட்ரம்பின் அதிரடி தாக்குதல்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட எச்சரிக்கை காணொளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணொளியில், அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் சென்று பல சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் காணொளி அமைந்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் சபதம்
செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
#Yemen Houthis post animation of US draped caskets floating around destroyed warships.
— Hussain Abdul-Hussain (@hahussain) March 15, 2025
These terrorists really cannot tell the difference between delusions and reality. pic.twitter.com/YiCzsyBvGc
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க இராணுவத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவிலும் கடந்த சனிக்கிழமை(15) இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்