விவாகரத்து எவ்வாறு தீர்மானிக்கப்படும்?

law court divorce peoples
By S P Thas Dec 30, 2021 11:14 AM GMT
Report
Courtesy: - பஸ்றி ஸீ. ஹனியா -

திருமணம் எனும் பந்தத்தினுள் உட்புகும் அனைவருமே வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்போம் எனும் உறுதிமொழியுடனேயே தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால், பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணிகளின் தாக்கத்தால் தமது உறுதிமொழியைப் புறந்தள்ளவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதன் விளைவாக திருமண முறிவு அரங்கேறுகின்றது.

திருமண முறிவு அடைந்துவிட்டால் திருமணமாகாத நிலையை அடைந்து திருமணமாகாதவர் ஒருவருக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் மறுபடியும் வழங்கப்படும். அவ்வாறு திருமண முறிவு ஒன்று சட்டத்தால் தீர்வாக வழங்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஆள்சார் சட்டங்களில் வேறு நடைமுறைகளும், பொதுச் சட்டத்தில் வேறு நடைமுறைகளும் காணப்படுகின்றன.

ஆகவே, இன்றைய புரிதல் பொதுச் சட்டத்தின் விவாகரத்து நடைமுறை பற்றியதாகும். இன்று நாட்டின் நீதிக்கட்டமைப்பு முறைமையில் முதனிலை குடியியல் நியாயாதிக்கத்தைக் கொண்ட மாவட்ட நீதிமன்றங்கள் திருமணப் பிணக்குகளால் நிரம்பி வழிகின்றன.

திருமணம் என்பது திருமண ஒப்பந்தத்துக்குத் தகுதி எனக் காணும் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சமூகக் கோட்பாட்டின் உறுதிமொழியின் பிரகாரம் இணைந்து ஒரு குடும்பத்தை சட்டரீதியில் உருவாக்குவது எனலாம். இருந்தபோதிலும் ஓரினத் திருமணங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனாலும், இலங்கையில் இற்றை வரைக்கும் இதற்கு அனுமதி இல்லை என்ற காரணத்தால் நாம் இந்த வரைவிலக்கணத்தைக் கூறுவோம்.

எதிர்காலத்தில் ஓரினத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால் அப்போது வரைவிலக்கணங்களை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். விவாக - விவாகரத்துக் கட்டளைச் சட்டம் விவாகரத்துக்கு மூன்று வழிகளை (திருமணக் குற்றங்களை ) அறிமுகம் செய்கின்றது. இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வழியாகவே அதாவது குறிப்பிட்ட திருமணக் குற்றத்தை நிரூபிப்பதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பு தனக்கான நிவாரணமாக விவாகரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒரு திருமணக்குற்றம் (Matrimonial fault) ஒரு தரப்பிடம் இருந்தால் மட்டுமே மற்றைய தரப்பு நிவாரணம் பெற முடியும் என்பதாகும்.

முதற் குற்றம் சோரம் போதலாகும் (Adultery). இது எம்மவர் சமூகத்தினரிடையே கணக்கிலெடுக்கக்கூடிய அளவில் வேரூன்றிவிட்ட ஒன்று. அதாவது திருமணமான ஆணோ, பெண்ணோ திருமண ஒப்பந்தத்துக்குப் புறம்பாக வெளிநபர் ஒருவருடன் பாலியல் ரீதியான உடல் தொடர்பைக் கொண்டிருப்பதாகும். இது இரு மணதாரத்திலிருந்து (Bigamy) வேறுபட்டது.

இருதாரமணம் இலங்கை தண்டனைச்சட்டக் கோவையின் மூலம் 7 வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமாகும். ஆனால், சோரம் போதலானது திருமணக் குற்றம் மட்டுமே. அதாவது விவாகரத்துக்கான ஒரு வழியே அன்றி தண்டிக்கப்படக் கூடிய குற்றமல்ல. இதனை எளிய முறையில் கூறுவோமானால், திருமணத்துக்குப் பின் சட்டரீதியற்ற பாலியல் உறவை வைத்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படாது.

விவாகரத்துக்குரிய காரணிகளில் ஒன்றாக மாத்திரமே கருதப்படும். ஆனால், சட்டரீதியாக இன்னொருவரைத் திருமணம் செய்து துணைவராக்கிக் கொண்டால் அது சட்டரீதியான குற்றமாகக் கொள்ளப்படுகின்றது. இந்தச் செயற்பாடு திருமணத்துக்கு முன்னரோ அல்லது ஒரு தடவை நடந்த உடல் தொடர்பு என்ற ரீதியிலோ திருமணக் குற்றமாகக் கருதப்படமாட்டாது.

மாறாக திருமணத்தின் பின் தொடர்ச்சியாக வேறோருவருடன் உடல் சார்ந்த உறவைப் பேணி வருவதே இந்தக் குற்றமாகும். ஆனால், தாய் அத்தகைய உறவைப் பேணுகின்ற போதிலும் தந்தை நிரூபிக்கப்பட்ட பிள்ளையின் பராமரிப்பு கடமைப்பாட்டில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. ஆனால், நடைமுறைச் சிக்கல் என்னவெனில் சோரம் போதலை நிரூபிப்பது நிகழ்தகவளவில் கடினமானதொன்று.

உடல் உறவு (Sexual Intercourse) இன்று நிகழ்தகவளவில் (Balance of Probabilities) நிரூபிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது குற்றஞ்சாட்டும் தரப்பு குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்தத் தவறை செய்தார் என நிரூபிக்கும் (Burden of Proof) பொறுப்பை சட்டத்தின் பால் ஏற்கக் கடமைப்பட்டவர். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் விவாகரத்து விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவது யதார்த்த சாதாரணமாகும்.

இரண்டாவது குற்றமாக வன்ம உறவறுப்பைக் (Malicious Desertion) காட்டலாம். இது இன்று வரை நீதித்துறையின் தொடர் பொருள்கோடல் பணிக்கு வாய்ப்பளித்து வரும் ஒரு கோட்பாடாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு வாழ்க்கைத் துணை மற்றைய துணையுடன் வாழ்வது பொறுத்துக்கொள்ள முடியாத (Intolerable) துன்பத்தையும் வாழ்வுக்கே ஆபத்தானதாகவும் (endanger to Life) அமையும் எனில் அதை நாம் வன்ம உறவறுத்தலுக்கு உதாரணமாகக் காட்டலாம்.

எவ்வாறெனிலும் அத்துன்பத்தை விளைவிக்கும் நபர் திருமண பந்தத்ததை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் (Intention) அதனைச் செய்திருக்க வேண்டும். இன்று பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் இப்பகுதியினுள்ளேயே தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் அனைத்து திருமண குற்றங்களும் திருமணத்தை முடிவுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்படின் அது இலகுவாக வன்ம உறவறுப்பு என்ற விடயத்தினுள் அடங்கிவிடும்.

ஏனெனில் சோரம் போதல் எனும் ஓர் திருமணக் குற்றத்தை புரியும் ஓர் ஆண் தனது மனைவியுடனான திருமண பந்தத்தை முடிவுறுத்த விரும்புவதாகக் காட்ட முடியும். இவ்வன்ம உறவறுப்பு இரண்டு பகுதிகளாகக் காட்சிப்படுத்தப்பட முடியும். முதலாவதாக சாதாரண உறவறுப்பு ( Simple Malicious desertion). இதில் துன்பத்தை விளைவிக்கும் துணை மற்றைய துணையை திருமண இல்லத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையாகும்.

துன்பம் தாங்காது அப்பாவி துணை வீட்டை விட்டு வெளியேறுவதையே இது காட்டுகின்றது. அடுத்த வகை, அமைய வன்ம உறவறுப்பாகும் (Constructive malicious desertion). இதில் பாதிக்கப்பட்ட தரப்பு திருமண இல்லத்தில் தங்கியிருக்கக் குற்றமுள்ள தரப்பு பந்தத்தை முறிக்கும் எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி செல்லலைக் குறிக்கும். மேலும் வெறும் உடல் ரீதியான பிரிவு மட்டும் ஒருபோதும் வன்ம உறவறுப்பாகச் சட்டத்தின் முன் காட்டப்படமாட்டாது.

தொழில் அல்லது பொருளாதாரக் காரணிகளின் தாக்கத்தால் இன்று தம்பதியினர் பிரிந்து வாழ்வது தவிர்க்க இயலாதது. எனவே, குற்றமுள்ள துணையின் திருமண பந்தத்தை முடிவுறுத்தும் எண்ணம் உறுதியாக நீதிமன்றின் முன்பு நிரூபிக்கப்படும் வரை விவாகரத்துப் பெறுவது சாத்தியமானதன்று.

மூன்றாவதாக நாம் சுட்டுவது, தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடிய தகைமை இழப்பாகும். இதை ஆங்கிலத்தில் Impotency எனக் கூறுவர். இது ஆண்களின் தந்தைமையையோ அல்லது பெண்களின் மகப்பேற்று தகைமையையோ குறிப்பதில்லை. மாறாக ஓர் ஆண் பெண்ணுடன் பாலுறவை ஏற்படுத்தக்கூடிய விடயம் என நம்பப்பட்டாலும் இன்றைய சட்ட கருதுகோள் பெண்களும் பாலியல் ரீதியில் உறவைப் பேண முடியாதவாறு உடல், உளப் பிணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவ வளர்ச்சியின் உதவியோடு நிரூபித்துள்ளது.

எனவே, இன்று இருபாலாரும் இந்தத் தகுதியீனத்துக்கு ஆளாகின்றார்கள். இதற்கு ஒரு முன்நிபந்தனையாக நிரூபிக்க வேண்டியது இந்தக் குறிப்பிட்ட தகுதியீனம் திருமணத்துக்கு முன்னிருந்தே பாதித்திருக்க வேண்டும். மேலும், திருமணம் நடக்கும் வேளையிலும் அவர் அந்தத் தகுதியீனத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புக்களால் உதாரணமாக திருமணத்தின் பின்னர் ஏற்படும் விபத்து மற்றும் மன உளைச்சல் என்பவற்றால் ஏற்பட்ட தகுதியீனத்தைக் காட்டி விவாகரத்துப் பெற முடியாது. மேலும், திருமணமாகி குறிப்பிட்ட காலங்களில்தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற வரையறைகள் எதுவும் கிடையாது என்பதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக இலங்கையில் திருமணத் தீர்வுகளாக விவாகரத்துப் பெற நிவாரணம் பெற விரும்பும் பகுதி மற்றைய தரப்பின் திருமணக் குற்றத்தை நீதிமன்றத்தின் முன் நிரூபிப்பது கட்டாயமானதாகும். எது எதுவாக இருந்தபோதிலும் இந்தக் கட்டாய குறையைக் கூறலானதே இன்று விவாகரத்து நடைமுறையானது பல வருடங்களுக்கு இழுத்துக் கொண்டும் விரைவாக விவாகரத்துப் பெற முடியாத நிலைக்கும் காரணமாகும். இதற்கு இன்று மாவட்ட நீதிமன்றங்களின் திருமணத் தீர்வு வழக்குகளின் பழுச்சுமையே ஆதாரமாகும்.

- பஸ்றி ஸீ. ஹனியா -

LL.B (Jaffna), AAL (R), MHRM (R)

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025