ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கணினி அமைப்பு நவீனமயமாக்கல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த சேவைகள் இன்று (13) முதல் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஓய்வூதிய திணைக்களத்தின் கணினி அமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் இந்த மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓய்வு பெற்ற தனிநபர்கள்
இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் பொதுமக்கள் தங்களுக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஓய்வூதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்து குறித்த நிலுவை கொடுப்பனவுகளை ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும் ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த முயற்சியின் கீழ், 2019 அல்லது அதற்கு முன்னர் ஓய்வு பெற்ற தனிநபர்களைப் பாதிக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |