தமிழினத்துக்கு துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம் : அகத்தியார் அடிகளார் வலியுறுத்தல்

Sri Lankan Tamils TNA Election
By Sathangani Feb 25, 2024 11:04 AM GMT
Report

“தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம். அது எமது தமிழின இருப்பைச் சிதைக்கும்“ என தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியார் அடிகளார் தெரிவித்தார்.

"தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்" எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ். கொடிகாமத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசியல் தீர்வை சர்வதேசத்திடம் வலியுறுத்தல் என்பது எவ்வளவு அவசியமானதோ அந்தளவுக்கு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையும் மிகமிக அவசியமானது. கூட்டாக இருந்த கட்சிகள் பிரிந்த காலம் போய் ஒரு கட்சிக்குள்ளேயே பெரும் பிளவு ஏற்பட்டிருக்கின்றது.

உலகில் மாயமான பிரபல சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா...

உலகில் மாயமான பிரபல சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா...

தமிழ்த் தேசியம்

தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை கட்சிகள் தங்களுக்கு ஏற்றால்போல் முடிவு செய்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்.

தமிழினத்துக்கு துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம் : அகத்தியார் அடிகளார் வலியுறுத்தல் | How To Handle Presidential Election Question Tnp

நீங்கள் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றீர்களா?, தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு கட்சிகளும் எப்படிப் பார்க்கின்றீர்கள்?, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்ளவர்கள் ஒன்றுக்கொன்று முரணான வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தும்போதும் தேசியத்துக்கு விரோதமான கருத்துக்களைத் தெரியப்படுத்தும்போதும் கட்சியின் நிலைப்பாடு என்ன?

நீங்கள் மக்களை ஒரு பொருட்டாகக் கருதுகின்றீர்களா?, அப்படி நீங்கள் கருதினால் அரசியல் அரசியல் அறிவு, தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களிடம் இருந்து வருகின்ற கருத்துக்களையும் உள்வாங்கி உங்களது பார்வையைச் செப்பனிடுகின்றீர்களா?, உங்களுக்குள் இருக்கும் களைகளை ஏன் முளையிலேயே பிடுங்கத் தவறுகின்றீர்கள்?

இலங்கையின் கல்வி முறையில் ஏற்படப்போகும் மாற்றம்! கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையின் கல்வி முறையில் ஏற்படப்போகும் மாற்றம்! கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

அதிபர் தேர்தல்

எதிர்வரும் அதிபர் தேர்தலை எப்படிக் கையாளப் போகின்றீர்கள்?, அதிபர் தேர்தல் சம்பந்தமாக என்ன முடிவுகளை நோக்கி மக்களை நகர்த்தப் போகின்றீர்கள்?, அந்த முடிவு சர்வதேசத்திடம் எமக்கான தீர்வுக்கான செய்தியாக அமையுமா? நீங்கள் எடுக்கப் போகும் முடிவு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்காது எம்மைச் சர்வதேசம் நோக்கி வெளிப்படுத்த உதவுமா?

தமிழினத்துக்கு துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம் : அகத்தியார் அடிகளார் வலியுறுத்தல் | How To Handle Presidential Election Question Tnp

இன்று இடம்பெறுகின்ற மண் பிடிப்பு, மதம்சார் நிலம் பிடிப்பு ஆகிய பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் நிகழும்போது மௌனமாக இருப்பது ஏன்? இந்த அநீதிக்கு எதிராக தீவிரமாக முன்நின்று செயற்படுபவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக்கொள்வது எதற்காக?

சர்வதேச நாடுகள் உங்களைக் கையாளுகின்றனவா? இந்தக் கையாடல் தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கும் நிலையில் நீங்கள் எவ்வாறு அதனைக் கையாளப்போகின்றீர்கள்? கட்சித் தலைமை பிழையான வழிநடத்தலைச் செய்கின்றது என்றபோதும் உங்களது மௌனம் அதை ஏற்றுக்கொள்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?

இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்! பெயரில் மாற்றம்

இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்! பெயரில் மாற்றம்

சர்வதேசத்தின் கவனம் 

இந்நிலை எமக்கு நீங்கள் செய்யும் மாபெரும் துரோகம் என எடுத்துக்கொள்வது மிகச் சரியானதே. தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம்.

அது எமது தமிழின இருப்பைச் சிதைக்கும். நீங்கள் எடுக்கின்ற முடிவுகளை அறிவுசார் பெரியோர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கத் தவறாதீர்கள்.

தமிழினத்துக்கு துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம் : அகத்தியார் அடிகளார் வலியுறுத்தல் | How To Handle Presidential Election Question Tnp

தமிழ்த் தலைமைகளின் சரியான ஏற்பாடும் ஒற்றுமையும்தான் எமக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும். அதனைத்தான் சர்வதேசமும் கவனிக்கும்.

மக்கள் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழ்த் தேசிய பாதையில், இன விடுதலைப் பாதையில் செல்லட்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்." - என தெரிவித்தார்.

இந்த கிராமத்தில் குடியேறினால் வீடு, காருடன் ரூ.15 லட்சம் இலவசம்! எங்க இருக்கு தெரியுமா...

இந்த கிராமத்தில் குடியேறினால் வீடு, காருடன் ரூ.15 லட்சம் இலவசம்! எங்க இருக்கு தெரியுமா...



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026