உடல் எடை குறையணுமா! எலுமிச்சை சாற்றுடன் இதை கலந்து குடித்தால் போதும்
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் செயற்கை முறையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தற்காலிகமான தீர்வையே இனங்காண முடியும்.
ஆனால் அது அவர்களின் உடம்பிற்கு பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.
உடல் எடை குறைப்பு
வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒரு சில இயற்கையான பொருட்களை வைத்து எப்படி விரைவாக உடல் எடையை குறைக்கலாம் என பார்க்கலாம்.
இஞ்சி,எலுமிச்சை,கிராம்பு ஆகியவற்றை வைத்து எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம்.
இஞ்சி
இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். செரிமானத்திற்கு உதவி மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். எடையை குறைக்க இதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையின் பகுதியாக எலுமிச்சையை பலரும் எடுத்துக்கொள்கிறார்கள்.
கொதிக்க வைத்திருக்கும் வெந்நீரை குடிப்பதனால் உடம்பில் நீர் சத்தானது அதிகரிக்கிறது. எடை குறைப்பில் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.
எனவே, ஒரு மேசை கரண்டி எழுமிச்சை சாறு, இரண்டு துண்டு இஞ்சி, 2-3 கிராம்பு ஆகியவற்றை சூடான நீரில் கலந்து தினமும் இரவு குடித்து வந்தால் உடல் எடை குறையும் என கூறப்படுகிறது.
மெட்டபாலிஸம்
இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் பெரும்பாலும் மெட்டபாலிஸத்திற்கும் செரிமானத்திற்கும் தான் உதவுகிறது.
உடனடியாக எடையை குறைக்க விரும்பினால் உணவுமுறை, ஆரோக்கியமான பழக்க வழக்கம், சீரான உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |