கொழும்பில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள்
கொழும்பில் (Colombo) வீடொன்றில் பெருந்தொகை துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தெமட்டகொடை, பேஸ் லைன் சாலையில் உள்ள களனி வெளி தொடருந்து பாதைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டொன்றில் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொலைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த குறித்த ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, ஒன்பது மில்லி மீற்றர் தோட்டாக்கள், இரண்டு உயிருள்ள தோட்டாக்கள், ஒரு T-56 துப்பாக்கி, மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொரளை பகுதியில் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மற்றொரு பிரிவைச் சேர்ந்த ஒருவரைக் கொல்வதற்காக இந்த துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், பொரளை பகுதியில் இந்த குழுக்களுக்கு இடையே இதற்கு முன்பு பல மோதல்கள் இடமபெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
