திடீரென பதவி விலகிய பிரதமர்! பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பம்!
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
2025 செப்டம்பர் 9 ஆம் திகதியன்று பிரான்ஸின் 47வது பிரதமராக இவர் நியமிக்கப்பட்டு 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
அவரது அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களில் இந்த விலகல் தீர்மானம் அறிவிக்கப்பட்டாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Image Credit: Ouest-France
பல்வேறு கட்சிகளும் அவரின் அமைச்சரவையை எதிர்த்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு (no-confidence vote) கோரியுள்ளதன் பின்னணியில் இது இடம்பெற்றுள்ளது.
புதிய பிரதமர்
அவரது பதவிவிலகல் பிரான்ஸ் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் குறித்த பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Credit: belganewsagency.eu
இதேவேளை, ஜனாதிபதி மக்ரோன் 2017 இல் பதவியேற்ற பிறகு எட்டாவது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், புதிய பிரதமர் நியமனம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
