இஸ்ரேல் : ஹமாஸ் போரில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் : ஐ.நா. பொது செயலாளர்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என போர் விதிகள் கூறுவதாக ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேபாளத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
முன்னதாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது' என பதிவிட்டுள்ளார்.
The protection of civilians is paramount.
— António Guterres (@antonioguterres) October 29, 2023
The Laws of War establish clear rules to protect human life and respect humanitarian concerns.
Those laws cannot be contorted for the sake of expedience.