வவுனியாவில் தியாக தீபம் திலீபன் நினைவாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனிக் நினைவுத் திடலில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
தீபம் ஏற்றி அஞ்சலி
ஐந்து அம்சக் கோரிக்கைய முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், மாநகர மேயர் சு.காண்டீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சி
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவுப் பேருரைகள்
அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. இறுதியாக நினைவேந்தலில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், உப தவிசாளர் க.இலங்கேஷ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. மேற்கு பிரதே சபையின் உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |