மனைவியை அடித்து கொலை செய்த கணவன்
death
husband
wife
magaragama
By Shalini
மகரகம பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தலையில் பலமாக தாக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக கலுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது நேற்று உயிரிழந்துள்ளதாக மகரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இறந்த பெண்ணின் கணவரான 36 வயது நபரை பொலிஸார் கைது செய்தனர்
உயிரிழந்தவர் மகரகம - பமுனுவாவைச் சேர்ந்த தமரா தனுஷிகா ஜெயவீர (31) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
16 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் அந்தப் பெண்ணும் அவரது கணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியதுடன், கழுத்தை நெரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்