மனைவியின் கோடரி தாக்குதலில் கணவன் படுகாயம் : வெளியானது காரணம்
மஹாகளுகொல்ல காவல்துறை பிரிவில் உள்ள பொத்துவில் வீதி 19வது தூண் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் (23 ஆம் திகதி) தனது மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி,கணவனை கோடரியால் தலையிலும் முதுகிலும் தாக்கியுள்ளார். கணவர் முந்தைய இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பியதாகவும், மறுநாள் காலை ஆறு முப்பது மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கணவர் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
அவர் தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாற்பது வயதுடைய சந்தேக நரான மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
