முன்னாள் இராணுவ வீரரான கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
murder
arrest
police
wife
former solder
By Jaso
பேரிகமவில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி கணவனை சட்டையால் கழுத்தை நெரித்து கட்டிலில் வைத்து கொலை செய்துள்ளதாக ஹொரண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ வீரரான வசந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 30 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், நேற்று இரவும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி