அரசில் இணையும் முடிவை வெளிப்படையாக அறிவித்தார் ராஜித
SJB
Dr Rajitha Senaratne
By Sumithiran
சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டை தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார்.
இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல, உணவுதான் என அவர் தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, எந்தவொரு அரசாங்கமும் தனது எதிர்கால நலன் கருதி அமைச்சர்களை நியமிக்கும் என தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி