மகிந்த தரப்பை நெருங்கிய விசாரணை: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு
போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அவரது கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது.
அங்குணகொலபெலஸ்ஸ தலாவைச் சேர்ந்த மனம்பேரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
தீவிர குற்றச்சாட்டுகள்
மேலும், "இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு எங்கள் கட்சி ஒருபோதும் மென்மையான கொள்கையைப் பின்பற்றுவதில்லை" என்று காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த விசாரணைகள் விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலைமறைவு
இந்த நிலையில், கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் தயாரிப்ப்பு இராசாயனங்களை மறைத்து வைத்திருந்ததன் பேரில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , விசாரணைகளை தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளதையடுத்து காவல்துறையினர் கைதுக்கான தேடலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
