மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்! டிரம்ப் சூளுரை
மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்ப் தகுதியற்றவர் எனக் கொலாராடோ நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரைத் தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது பதவியில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைகள் தவறு, இதன் மூலமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
வெளியுறவுக் கொள்கைகள்
அது மாத்திரமல்லாமல் அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது.
இடம்பெறவுள்ள மூன்றாம் உலகப்போர் வெறும் இராணுவங்களுக்கு இடையேயான சண்டையாக முடிந்துவிடாது. உலகையே அழித்துவிடும்."என கூறியிருந்தார்.
டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால்
மேலும், 'டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால் உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் போரே நடந்திருக்காது' என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியதை அவர் இந்த வேளையிலே சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் கொலாராடோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக டிரம்ப் மேன்முறையீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.