தாய்மொழிக்கல்விக்காக IBC தமிழ் $1500 வழங்குகிறது: நீங்களும் பயன் பெறலாம்
உலகத் தாய்மொழி நாளை (பெப்ரவரி 21) முன்னிட்டு IBC தமிழ் ஊடகக் குழுமம் $1500 பெறுமதியான தாய்மொழிக் கல்விப் புலமைப்பரிசில் ஒன்றை அறிவித்துள்ளது.
உச்சி.காம் வலைத்தளத்தில் உள்ள தமிழ்மொழி சார்ந்த கற்கை நெறிகளில் இணையும் முதல் 100 பேருக்கு கற்கை நெறியின் பாதிக் கட்டணத்தை ($15) புலமைப்பரிசிலாக வழங்க IBC தமிழ் ஊடகக் குழுமம் முன்வந்துள்ளது. நீங்கள் உலகின் எப்பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் இதன் மூலம் பயன் பெறலாம்.
uchchi.com இன் கற்கை நெறியொன்றைக் (online course) கொள்வனவு செய்யும்போது பின்வரும் discount coupon code ஐ உள்ளிடுவதன் மூலம் நீங்கள் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்:
tamil50ibc
மேற்காணும் சலுகை விலையில் uchchi.com இன் கற்கை நெறியைக் கொள்வனவு செய்வது எவ்வாறு என்பதற்கான படிமுறைகள் இச்செய்தியின் முடிவில் விளக்கப்படங்களாகத் தரப்பட்டுள்ளன.
நீங்கள் இணைந்து பயன்பெறக்கூடிய கற்கை நெறிகள்:
சிறுவர்களுக்கான தமிழ்
அருகில் இருந்து உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தர ஓர் ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம்.
உச்சி.காம் இன் ‘சிறுவர்களுக்கான தமிழ்’ வலைவழிக் கற்கை நெறி இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘சிறுவர்களுக்கான தமிழ்’ கற்கை நெறியைக் கொள்வனவு செய்ய இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
நீங்களும் மரபுக்கவிதை எழுதலாம், பாடலாசிரியர் ஆகலாம்
இலக்கணப் பிழையில்லாமல் மரபுக் கவிதைகள் புனைய விரும்புவோரும், தரப்பட்ட மெட்டுக்குத் திறம்படப் பாட்டெழுதும் பாடலாசிரியராக வர விரும்புவோரும் தவற விடக்கூடாத கற்கை நெறி இது.
‘யாவர்க்கும் யாப்பிலக்கணம்’ கற்கை நெறியைக் கொள்வனவு செய்ய இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
தமிழில் பிழையில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ஒருவர் தெரிந்திருக்க வேண்டிய இலக்கண அடிப்படைகளை இக்கற்கை நெறி எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் விளக்குகிறது.
‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ கற்கை நெறியைக் கொள்வனவு செய்ய இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
Uchchi.comஇல் ஐபிசி தமிழின் $15 விலைச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன (இந்தத் தகவல்களை PDF ஆக இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்):













