அடையாள அட்டை இன்றி வெளியில் செல்வது எப்படி? பொலிஸார் வெளியிட்ட தகவல்
covid
police
people
ajith rohana
id card
By Vanan
நாடு முழுவதும் அமுலில் இருந்த பயணத் தடை இன்று (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்றைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் இறுதி இலக்கம் அல்லது கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் படியே இன்று வெளியே செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்