மோசமடையும் நிலைமை! நாட்டை முழுமையாக முடக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
நாட்டை சில தினங்களாவது முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை காரணமாக, சில தினங்களாவது நாட்டை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவ்வூடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய மேலதிக செய்திகளை காண்க..
இலங்கையில் 15 மணி நேர மின்தடை! ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை
கடும் எரிபொருள் நெருக்கடி! பாதிக்கப்படும் பேருந்து சேவைகள்
மின் தடையால் அரச ஊழியர்களுக்கு புதிய நடைமுறை!
