பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...!
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மரணத்தின் பின்னர் இளையராஜா தனது முகபுத்தகத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
“அன்பு மகளே” என பதிவிட்டு அவருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் “ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்த பதிவானது அனைவரது மத்தியில் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானியின் பதிவு
மேலும், திரைப் பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர், முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டர் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது" என பதிவிட்டிருந்தார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
ரஹ்மானின் இரங்கல்
நேற்றையதினம்(25) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்த பவதாரணியின் உடல் இன்று இந்தியா எடுத்து செல்லப்பட்டது.
இறுதி கிரியைகள் இதனை தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி கிரியை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#ripbhavatharini மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல்
— A.R.Rahman (@arrahman) January 26, 2024
இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.
காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்
ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா
Our hearts are with you in this time of…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |