கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்தாக கூறப்படுகிறது.
அவர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1171 இல் இந்தியாவின் சென்னையில் இருந்து அதிகாலை 03:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த பெண் கொண்டுவந்த பயணப்பொதியில் 587 கிராம் 316 மில்லிகிராம் எடையுள்ள இந்த தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட 54 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவர் ஆவார்.
கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் அதனை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த வர்த்தகப் பெண்னையும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.