இயற்கை அனர்த்தத்திலும் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடு :மடக்கிப் பிடித்த காவல்துறை
Kilinochchi
Sri Lanka Police Investigation
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Independent Writer
Courtesy: siva
டித்வா புயல் அதனாலேற்பட்ட பாரிய மழையை அடுத்து கிளிநொச்சியில் உள்ள பல குளங்களின் அணைக்கட்டுக்கள் உடைப்பினால் மண்ணரிப்பு ஏற்பட்டது.
இவ்வாறு மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களை இனம்கண்டு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகளை மேற்கொண்டு மணல் ஏற்றி வருகின்ற டிப்பர் வாகனங்களை கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர் இனம் கண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் சாரதிகளை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகளை மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளனர்.

கிளிநொச்சியில் அண்மைக்காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி