வவுனியாவில் சட்டவிரோதமாக கடத்தப்படும் மருத மரங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வவுனியாவில் (Vavuniya) குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிக்கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், ”வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.
பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மைய நாட்களாக இனம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
7 வரையான மரங்கள்
குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சொற்பநாட்களில்7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உரியதிணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 23 மணி நேரம் முன்
