இலங்கைக்கு தடையாக மாறிய சீனா
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு சீனா தடையாக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரிய கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்புக்கள் இலங்கைக்கான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கியுள்ள பின்னணியிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சாதகமான பதிலை வழங்கவில்லை
எனினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா இதுவரை எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடி நிலையில் இருந்து மீளவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மிக முக்கியமானதென விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
