வலுப்பெற்று வரும் இலங்கை பொருளாதாரம் : சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
சிறிலங்காவின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தமது திட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போகும் வெளி வணிகக் கடனாளர்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று பலமான எதிர்பார்ப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூன் 12 ஆம் திகதி செயற்குழு ஒன்று கூடி சிறிலங்கா தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடும் என்று பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
பொருளாதார கொள்கை
அத்தோடு, சிறிலங்காவின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளதுடன் குறிப்பிடத்தக்க சாதனைகளில் விரைவான பணவீக்கம், வலுவான இருப்பு சேர்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் என்பன அடங்கும் என்றும் இவை அனைத்தும் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பின் அடுத்த படிகளாக வெளிப்புற வணிகக் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பது மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது என்பவையே எஞ்சியுள்ளன என்று ஜூலி கோசாக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |