இலங்கைக்கு வருகை தரவுள்ள IMF -இன் விசேட ஆய்வுக் குழு
சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பான பல முக்கிய நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் திட்டங்கள் குறித்து, ஐஎம்எஃப் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் விளக்கம் அளித்துள்ளார்.
செனகல், இந்தியா, இலங்கை மற்றும், அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தின் 2025 ஆண்டின் நகர்வுகள் குறித்தே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சமீபத்திய புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவு மற்றும் தாக்கத்தை மதிப்பிட, ஜனவரி 22 முதல் 28 வரை இலங்கைக்கு ஐஎம்எஃப் உண்மைத் தகவல் சேகரிப்பு (fact-finding) குழு செல்லவுள்ளது.
பயணத்தின் நோக்கம்
இந்தப் பயணத்தின் நோக்கம் சேதத்தின் அளவை புரிந்து கொண்டு, EFF (Extended Fund Facility) திட்டத்திற்கான விளைவுகளை ஆராய்வதாகும்.

இது தகவல் சேகரிப்புக்கான பயணம் மட்டுமே எனவும், இலங்கைக்கு எதிர்காலத்தில் எவ்வாறு சிறப்பாக ஆதரவு வழங்கலாம் என்பதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது” என கூறியுள்ளார்.
மேலும் இந்தியா குறித்து கருத்து வெளியிட்ட அவர், உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாக ஐஎம்எஃப் குறிப்பிட்டது என்றும், 2025-ல் மேற்கொள்ளப்பட்ட Article IV மதிப்பீட்டின் அடிப்படையில், 2025–26 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கோசாக் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |