குடிவரவு திணைக்களம் நாளை திறந்திருக்கும்
Strike Sri Lanka
Department of Immigration & Emigration
By Jaso
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் நாளை (30) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழமை போன்று இயங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சமிந்த பத்திராஜா விடுத்துள்ள அறிக்கையில், பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக திணைக்களம் மூடப்படும் என வெளியாகும் செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.
அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும்
திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் திறந்திருக்கும் மற்றும் அவற்றின் வழக்கமான செயல்பாடுகளைத் தொடரும் என்று அவர் கூறினார்.

அதன்படி, கடவுச்சீட்டு வழங்கல், விசா தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் எந்தவித இடையூறும், தாமதமும் இன்றி வழக்கம் போல் வழங்கப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |