கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு -மருத்துவர் வெளியிட்ட தகவல்
doctor advice
recovered
covid patient
By Sumithiran
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த சிலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கொடை மனநல மருத்துவர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நோய் குணமடைந்த பிறகும் ஏற்படக்கூடிய மூச்சு, பேச்சு மற்றும் நடை பயத்தால் இந்த நிலை ஏற்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சிலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக கூறிய அவர், அத்தகையவர்கள் 1926 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல கிளினிக்குகளில் ஆலோசனை பெறலாம் என்றார்.
வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்த நிலை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.