தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல்

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Oct 09, 2024 12:07 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தமிழ்த் தேசிய அரசியலை  காப்பாற்ற கூடிய வகையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தலைவர்கள் எவரும் தென்படவில்லை என்பதே பொய்யின் நிழல்படாத உண்மை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கிறது தமிழினம் உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஐக்கியப்பட்டு குறைந்தபட்சம் தேர்தல் கூட்டாவது அமைத்திருக்கலாம்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மகிழ்ச்சியின் உச்சத்தில்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மகிழ்ச்சியின் உச்சத்தில்

தமிழ்த்தேசியத்தின் இருப்பு

பதவி வெறியாலும் அதிகார திமிராலும், ஆணவச் செருக்காலும் மற்றும் ஆளுக்கு ஆள் தனி வழி சென்று தமிழ்த்தேசியத்தை இருப்பை கூறு போட கங்கனம் கட்டி நிற்கிறார்கள்.

இன விடுதலை அரசியலை முன்னெடுக்க கிஞ்சித்தும் அறச்சிந்தனை அற்ற பதவி சுகபோகிகள் மீண்டும் தமிழினத்தை கருவறுக்க முனைகிறார்கள்.

தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல் | Impact Of Tamil Parties On Future Of Tamil People

சிங்கள தேசம் காலத்துக்கு காலம் தமது இருப்பை தனதாக்க ஒரே நோக்கில் சிந்திக்கிறது அத்தோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் ஒருவரை ஒருவர் அகற்ற முனைகிறார்கள்.

உட்கட்சிகளின் ஊசலாட்டம் ஊரே சிரிக்கிறது இவர்கள் எவரும் இனம் சார்ந்து சிந்திப்பதாக இல்லை பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் உருப்படியாக எதுவுமே சாதிக்கவில்லை தனது சுய இலக்கை மட்டுமே எட்டியுள்ளனர்.

தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாபின்னமான தமிழரசுக் கட்சி

தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாபின்னமான தமிழரசுக் கட்சி

நாடாளுமன்ற தேர்தல்

இந்த தேர்தலிலும் போட்டியிட வெட்கம், மானம், ரோசம் மற்றும் சுய கௌரவம் தன்மானமின்றி தேர்தல் களத்திற்கு வருகிறார்கள் இவர்களுக்கு எதிராக சிவில் அமைப்புகள் தன்னார்வலர்கள் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

புதியவர்களில் வல்லவர்களை களத்திற்கு அனுப்புங்கள் தமிழ்த்தேசிய உணர்வும் தூய விசுவாசமும் இனப்பற்றும் இரண்டகமற்ற செயற்பாட்டர்களாக உள்ளவர்களை தெரிவு செய்யுங்கள் அதிகம் படித்தவர்கள் என்று கூறுபவர்கள் இந்த நாட்டை சீர்குலைத்தது இருக்கிறார்கள்.

தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல் | Impact Of Tamil Parties On Future Of Tamil People

சட்டத் தரணிகளாலே தமிழர் அரசியல் படு பாதாளத்துக்கு சென்றது தமிழின விரோதிகளான இந்த நாட்டின் இனவாதத்தின் மூலவர்களான ஜே.வி.பி யை ஆதரிக்க முனைவது என்பது கடந்த கால வரலாறு எதுவுமே தெரியாத அல்லது வரலாற்றை மறந்து தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

சிந்தியுங்கள் ஜே.வி.பியை மீட்பர் என கொண்டாட முனையும் இளைய சமூகமே இவர்களின் கடந்த கால வரலாற்றை தேடி படியுங்கள்.

சுயேச்சை சின்னமான சங்கு இன்று கட்சியின் கைகளில் - முன்னாள் எம்.பி ஆதங்கம்

சுயேச்சை சின்னமான சங்கு இன்று கட்சியின் கைகளில் - முன்னாள் எம்.பி ஆதங்கம்

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரிதாரமே அவர்களின் சுயம் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் இல்லையேல் பலரது அரசியல் எதிர்காலம் கனவாகவே போய்விடும் குறைந்தபட்சம் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் போட்டித் தவிர்ப்பை மேற்கொள்வது அவசியமாகும்.

தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விகுறிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய அரசியல் சில சுயநலவாதிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி தவிக்கிறது.

தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல் | Impact Of Tamil Parties On Future Of Tamil People

கூட்டு ஐக்கியத்தை யே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பல அணிகளாக பிரிந்து நிற்பதை தமிழ் மக்கள் ரசிக்கவில்லை விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

தனித்தனியாக தேர்தலை சந்திப்பது என்பது முடிவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தமிழ்த் தேசிய அரசியலை இனி எவராலும் காப்பாற்ற கூடிய வகையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தலைவர்கள் எவரும் தென்படவில்லை என்பதே பொய்யின் நிழல்படாத உண்மை.

பல அரசியல்வாதிகளை காலம் காணாமல் போகச் செய்யப் போகிறது என்பது மட்டும் புலனாகிறது  தமிழ் மக்கள் தேசமாக சிந்திக்கும் சூழலையே தமிழ்த் தேசிய கட்சிகள் இல்லாமல் செய்து விட்டனர் என்பது கள யதார்த்தம் புரிந்து கொள்வர்களா ? என குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022