அச்சத்தில் DMK - 41% ஆட்சியை பிடிக்கும் விஜய்: தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
நாளை வெளியாகவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான புள்ளி மட்டுமல்ல அது தமிழகத்தின் பாரம்பரிய இருமுனை அரசியலில் ஏற்படப்போகும் ஒரு பாரிய மாற்றத்திற்கான சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது பலத்தை நிரூபித்து மீண்டும் அரியணை ஏறுமா என்பதே இந்தத் தேர்தல் முடிவுகளின் மையப்பொருள்.
குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.
பழைய அரசியல் சக்திகளுக்கும் புதிய வரவுகளுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் யாருடைய வாக்குகள் பிரிக்கப்படப் போகின்றன ? என்ற கேள்வி பிரதானமானது.
கருத்துக்கணிப்புகள் பலவாறு கூறினாலும் தமிழக மக்கள் எத்தகைய புதிய அரசியல் தலைமையையோ அல்லது நிலைத்தன்மையையோ விரும்புகிறார்கள் என்பதற்கான சமிக்ஞைகளை இந்த முடிவுகள் வெளிப்படுத்தும்.
இதனடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம், மும்முனைப் போட்டியின் தாக்கம், புதிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பு மற்றும் அடுத்த தமிழக முதல்வர் யார் என்பது உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |