மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் அமெரிக்காவின் கைகளில்! ஈரான் வெளிப்படை
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது மீண்டும் நேரடிப் போருக்குத் திரும்புவதா என்பதை ட்ரம்ப் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி இது குறித்து அந்நாட்டு தூதர்களிடம் நேற்று(02.05.2026) கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரின் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இராஜதந்திரப் பாதை
"இப்போது, இராஜதந்திரப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா அல்லது மோதல் போக்கைத் தொடர்வதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமெரிக்காவின் கையில் உள்ளது.

தனது தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் நோக்கத்தில், ஈரான் இரண்டு வழிகளுக்கும் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஈரானிய இராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் மூத்த அதிகாரியான முகமது ஜாஃபர் அசாதி, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
இதன்படி அமெரிக்கா எந்த வாக்குறுதிகளுக்கோ அல்லது ஒப்பந்தங்களுக்கோ கட்டுப்படவில்லை என்பதை ஆதாரங்கள் காட்டியுள்ளன," என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |